ஊடகவியலாளர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கப்படும்; அமைச்சர் ஹரின்

🕔 December 18, 2015

Harin - 09876டகவியலாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ‘ஸ்மார்ட் ஃபோன்’ மற்றும் விசேட சலுகைகளுடன் கூடிய தொலைத் தொடர்பு இணைப்பினை வழங்கவுள்ளதாக தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போது, இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர்  கூறினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் வரவு- செலவுத் திட்ட  விவாதத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ் விடயத்தினைக் கூறினார்.

இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக கையடக்க தொலைபேசி மற்றும் விசேட சலுகைகளுடன் கூடிய தொலைத் தொடர்பு இணைப்பினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்