
வங்கியில் 15 கோடி ரூபாவை மோசடி செய்த நபர்கள் இருவரை, வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மேற்படி நபர்கள் இருவரும் ஹட்டன் நஷனல் வங்கியின் 76 நடப்புக் கணக்குகளில் இந்த மோசடியைப் புரிந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் – ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமையகத்தில் பிராந்திய முகாமையாளராகப் பணியாற்றிய நீல் கிறிஸ்டோபர் சொய்சா என்பவராவார். மற்றையவர் ‘செல்டெல்’ ரவி எனப்படும் திலகரட்ணம் ரவிச்சந்திரன் என்பவராவார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கியில் முதன்மை நிலை கணக்குகளை வைத்திருக்கும் மூன்று வர்த்தகர்களின் பணமும் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி 06 மாதங்களாக இடம்பெற்று வந்துள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.



