சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் அகற்றப்படாத குப்பை: கல்முனை மாநகர சபையின அலட்சியம்

🕔 March 15, 2022

– அஸ்ஹர் இப்றாஹிம் –

ல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது குடியேற்ற கிராமமான பொலிவேரியன் பிரதேசத்தின் மேற்புறமாகவுள்ள பிரதேசத்திலும், பாலத்துக்கு அருகாமையிலும் குப்பைகள்,  பல மாதங்களாக அகற்றப்படாமல் குவிந்து காணப்படுகின்றது.

மக்கள் நடமாட்டமுள்ள இப்பிரதேசத்தில் பொது மைதானம் , விவசாய விரிவாக்கல் அலுவலகம் , சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் , கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் , கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயம் , ஹிஜ்ரா பள்ளிவாசல் போன்ற பல முக்கிய  காரியாலயங்களும் , அரச நிறுவனங்களும் அமையப் பெற்றுள்ளன.

மக்களால் கொட்டப்படும் குப்பைகள் கல்முனை மாநகரசபையினால் அகற்றப்படாமையினாலேயே மாதக்கணக்கில் இக்குப்பைகள் குவிந்து கிடப்பதற்கு காரணமாகும்.

இந்த பகுதியில் மிருகங்களின் கழிவுகள் , வீட்டு கழிவுகள் என்பன வீசப்படுவதனால் – அவை விலங்குள் மற்றும் பறவைகளினால் பல இடங்களுக்கும் பரப்பப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு இப்பிரதேச மக்கள் சுகாதார சீர்கேடுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Comments