‘உளநோய்களும் உளப் பரிசுத்தமும்’; தாருஸ்ஸலாம் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர்
‘உளநோய்களும் உளப் பரிசுத்தமும்’ என்ற தலைப்பிலான இஸ்லாமிய விரைவுரை நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெறவுள்ளது.
ஜாமியா நளீமியா விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பழீல் இந்த விரிவுயைினை வழங்குகின்றார். இன்றைய நிகழ்வுக்கு மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமை தாங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில், அக்கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் இரு வாரங்களுக்கு ஒரு முறை வியாழக்கிழமைகளில், தொடர்ச்சியாக இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலமாக்களினால் வழங்கப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.
இவ்வாறான நிகழ்ச்சிகளின் ஊடாக, முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே பரஸ்பர சகோதரத்துவ உறவை கட்டி எழுப்புவதோடு, புதியதொரு அரசியல் கலாசாரத்தையும் தோற்றுவிக்க முடியும் என அக்கட்சி எதிர்பார்க்கின்றது.
எனவே, இன்றைய நிகழ்வில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டு குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.