அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை: வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு

🕔 March 6, 2022

திர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லையென ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று (06) இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம்மூலம் நாளைய தினம் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் விடயத்தில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் வரையில், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்