பல்கலைக்கழக மாணவர்களை மகன் தாக்கிய விவகாரத்தில் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த அருந்திகவுக்கு மீண்டும் பதவி

🕔 March 4, 2022

ளனிப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் தனது மகன் விளக்க மறியலில் வைக்கப்பட்டமையை அடுத்து, ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த அருந்திக பெனாண்டோ, மீண்டும் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (04) இவரை ராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இதன்போது இரண்டு அமைச்சரவை அமைச்சர்களும், அருந்திக பெனாண்டோ உட்பட இரண்டு ராஜாங்க அமைச்சர்களும், ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்த அருந்திக பெர்னாண்டோ, மீண்டும் ராஜாங்க அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டோர் விவரங்கள் வருமாறு;

  • சி. பி. ரத்நாயக்க – வனவிலங்கு மற்றும் வனவளப் பாதுகாப்பு.
  • திலும் அமுனுகம – போக்குவரத்து அமைச்சர்.
  • விமலவீர திஸாநாயக்க – அனர்த்த முகாமைத்துவ ராஜாங்க அமைச்சர்.
  • அருந்திக பெனாண்டோ – தென்னை, கித்துள் மற்றும் பனை செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ராஜாங்க அமைச்சர்.

களனிப் பல்லைககழக மருத்துவ பீட மாணவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் ராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோவின் மகன் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து அருந்திக பெனாண்டோ தனது ராஜாங்க அமைச்சர் பதவியை கடந்த மாதம் 03ஆம் திகதி ராஜிநாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்