எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் தகவல்; பிராந்திய நாடுகளுடன் விலைகளை ஒப்பிட்டு அட்டவணையினையும் வெளியிட்டார்

🕔 February 19, 2022

லங்கையில் எரிபொருள்களுக்கான விலைகளில் திருத்தம் மேற்கொண்டு – நீண்ட காலமாகியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள்,சில சந்தர்ப்பங்களில் பிராந்தியத்திலுள்ள சில நாடுகளை விடவும், அரைவாசிக்கும் குறைவாகவே உள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயங்களை ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர், இதனை வெளிப்படுத்தும் விதமான அட்டவணையொன்றினையும் வெளிளிட்டுள்ளார்.

அந்த அட்டவணையின் படி, தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானுக்கு அடுத்ததாக குறைந்த விலையில் பெற்றோல் விற்பனை செய்யும் நாடு இலங்கையாகும். அதேவேளை, தெற்காசியாவிலேயே குறைந்த விலைக்கு டீசல் – இலங்கையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அட்டவணையின் படி, இலங்கை மற்றும் பிராந்திய நாடுகளில் எரிபொருள் விற்கப்படும் விலைகள் வருமாறு;

Comments

புதிது பேஸ்புக் பக்கம்