கனரக வாகனம் – முச்சக்கர வண்டி விபத்து; படுகாயங்களுடன் மூவர் வைத்தியசாலையில்

🕔 December 15, 2015

Accident - Hatton - 03
– க. கிஷாந்தன் –

ட்டன் செனன் பகுதியில், கனரக வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதியதில் படுகாயமடைந்த  மூவர், வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துச் சம்வம் இன்று செவ்வாய்கிழமை காலை நடைபெற்றது.

புத்தளத்திலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சீமெந்து ஏற்றி சென்ற கனரக வாகனமும், தலவாக்கலை வட்டகொடை பகுதியிலிருந்து வட்டவளை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியும், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி, ஹட்டன் செனன் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்தில்  முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த மேலும் இருவரும் படுங்காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் கூறினர்.

எனினும் கனரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.Accident - Hatton - 04

Comments

புதிது பேஸ்புக் பக்கம்