பயன்படுத்திய எரிவாயு சிலிண்டர்களை திருப்பிக் கொடுக்கலாம்: ஏற்க மறுத்தால் 1977க்கு புகாரளியுங்கள்

🕔 January 27, 2022

யன்படுத்திய எரிவாயு சிலிண்டர்களில் குறைபாடுகள் இருப்பதாக நுகர்வோர் சந்தேகித்து அவற்றினைத் திருப்பிக் கொடுத்தால், பெற்றுக் கொள்ளுமாறு எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க – இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும், சந்தேகத்திற்கிடமான குறைபாடுகளுடன் பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை ஏற்க மறுக்கும் வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக பொதுமக்கள் புகாரளிக்கலாம் என, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் கூறியுள்ளார்.

இது குறித்த முறைப்பாடுகளை, நுகர்வோர் அதிகார சபையின் 1977 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்