தங்கமாலை திருடி விற்றவருக்கு விளக்க மறியல்
– எப். முபாரக்-
தங்கச் சங்கியைத் திருடி, விற்பனை செய்த நபரொருவரை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் டி. சரவணராசா நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
திருகோணமலையில் ஒன்றறை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடி 49,000ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த, திருகோணமலை டோக்கியாட் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சந்தேகநபர் ஒருவரையே இவ்வாறு விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், குறித்த சந்தேக நபர் – வீடொன்றில் திருடிய ஒன்றறை பவுண் தங்கச் சங்கிலியை, 49,000 ரூபாவுக்கு திருகோணமலை நகரில் அமைந்துள்ள அஸிஸ் கோல்ட் ஹவுஸ் வியாபார நிலையத்தில் விற்பனை செய்துள்ளார்.
இதனையடுத்து, மேற்படி சந்தேக நபரை கைது செய்த திருகோணமலை பொலிஸார் நேற்று புதன்கிழமை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போதே, குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.