இந்திய முப்படை தலைமைத் தளபதி மற்றும் மனைவி உள்ளிட்டோர் ஹெலி விபத்தில் பலி

🕔 December 8, 2021

ந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிகழ்வில் உயிரிழந்துள்ளார் என்று இந்திய விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் இன்று (08) தமிழகத்தின் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

ராணுவ ஹெலிகாப்டரில் இவர் தன் குடும்பத்தோடு பயணிக்கும் போது இந்த விபத்து நடந்துள்ளளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடங்கியுள்ளன.

Comments