சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

🕔 December 3, 2021

ஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

25 வயதுடைய சந்தேக நபர் – ஹிங்குல பிரதேசத்தில் வைத்து நேற்று (02) கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் – பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (ரிஐடி) மேற்படி சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

இவர் ஹம்பாந்தோட்டை சிட்டிகுளம் பகுதியில், சஹரான் ஹாசிம் நடத்திய பயிற்சி மற்றும் விரிவுரைகளில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலம் ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் தொடர்புகளை பேணி அவர்களுக்கு சந்தேக நபர் உதவியமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், அவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயங்கரவாத விசாரணைப் பிரிவு மேற்கொள்ளும் எனவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்