‘கள்ள’ மாடுகளுடன் ராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது

🕔 December 2, 2021

ராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும் ஒருவரை, திருடப்பட்ட மாடுகளை ஏற்றிய இரண்டு வாகனங்களுடன் கைது செய்துள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்தள பிரதேசத்தில் திருடப்பட்ட 22 மாடுகளை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைக்கு கொண்டு செல்லும் போது, சந்தேக நபர் லுணுகம்வெஹெர பிரதேசத்தில் வைத்து நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

இறைச்சிக்காக அறுக்கப்படவிருந்த மாடுகளை விடுவித்து மக்களுக்கு வழங்க கொண்டு செல்வதாக குறித்த சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து இலங்கை அகிம்சை மகா சங்கத்துக்கு அறிவித்து, அதன் தலைவரிடம் பெறப்பட்ட நன்றிக் கடிதத்தையும் சந்தேக நபர், பொலிஸாரிடம் காண்பித்துள்ளார்.

எனினும் சந்தேக நபர், மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்ய கொண்டு செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் விசாரணைகளில் உறுதிப்படுத்தியுள்ளனர். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்