ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர், நிந்தவூரில் கைது

🕔 November 30, 2021

– பாறுக் ஷிஹான் –

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில்  பெண் உள்ளிட்ட மூவரை நிந்தவூர் பிரதேசத்தில் வைத்து சம்மாந்துறை பொலிஸார் கைது செய்தனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் தியோட்டர் வீதிக்கு அருகில்  வைத்து, பெண் உட்பட  மூவர்  80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று திங்கட்கிழமை 29) இரவு கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதான மூவரும்   நிந்தவூர்  பகுதியை சேர்ந்தவர்களாவர். இவர்கள் 51,27 மற்றும் 18 வயதினர்.

அரச புலனாய்வுப் பிரிவினரின் தகவலுக்கமைய சம்மாந்துறை  பொலிஸார் குறித்த  மூவரையும்  கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதுடன், கைது செய்யப்பட்ட நபர்கள் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Comments