விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காவலாளி சடலமாக மீட்பு

🕔 December 8, 2015

Dead body - 011– எப். முபாரக் –

திருகோணமலைபிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காரியாலயத்திலிருந்து, இன்று செவ்வாய்க்கிழமை காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை – கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருணாச்சலம் டேவிட் (வயது 57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், நேற்று திங்கட்கிழமை மாலை அலுவலகத்துக்கு விளக்கேற்றிவிட்டு வருவதாக கூறிச்சென்றிருந்தார். ஆயினும், இரவு வரை வீடு திரும்பாததையடுத்து, அவருடைய மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், திணைக்களத்தின் காவலாளி அறையிலிருந்து குறித்த நபரை சடலமாக மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்