வரலாற்றில் அதிகமானோர் எழுதும் பரீட்சை, மழையுடன் துவங்கியது

🕔 December 8, 2015

OL exam - 091

.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகிறது.

சாதாரண தரப் பரீட்சை வரலாற்றில் அதிகமான பரீட்சார்த்திகள் இம்முறை தோற்றுகின்றனர்.

அந்தவகையில், 06 லட்சத்து 64 ஆயிரத்து 715 பேருக்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பொருட்டு அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்களுள் 04 லட்சத்து 3,444 பேர் பாடசாலைகளிலிருந்து விண்ணப்பித்தவர்களாவர்.

இதேவேளை, நாடாளாவிய ரீதியில் 4,670 பரீட்சை நிலையங்களில் மேற்படி பரீட்சை நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாறையில் மழை

க.பொ.த. சாதரண தரப் பரீட்சைகள் இன்றைய தினம் ஆரம்பமாகும் நிலையில், இன்று அதிகாலை முதல் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதனால், பரீட்சைக்குத் தோற்றுவோர் பல்வேறு அசௌகரியங்களின் மத்தியில் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதை அவதானிக்க முடிந்தது.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை, வானிலை சீராகக் காணப்பட்டது.

ஆயினும், இன்று அதிகாலை முதல் – மழை பெய்து வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்