குப்பை மேட்டில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்; ஏன் கொலை செய்யப்பட்டார்? எப்படிக் கொலையானார்: வெளியானது தகவல்

🕔 November 7, 2021

ப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பயணப் பொதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

கொழும்பு – மாளிகாவத்தை வீட்டு தொகுதியை சேர்ந்த மொஹமட் ஷாஷி பாத்திமா மும்தாஸ் என்ற இந்த பெண் கொலை செய்யப்பட்டு, சடலம் பயணப்பையில் வைத்து குப்பை மேட்டில் வைத்து செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான பொலிஸ் விசாரணையில், உயிரிழந்த பெண் இறுதியாக ரொஸானா என்ற பெண் மற்றும் அவரது சகோதரனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அனைத்து தகவல்களும் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட ரொஸானா என்ற பெண்ணும் சூதாட்டத்துக்கு மிகவும் அடிமையாகிய ஒருவர் என தெரிவந்துள்ளது. ரொஸானா கொழும்பிலுள் சூதாட்ட நிலையமொன்றில் வைத்து தன்னிடம் இருந்த அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இறுதியாகி திருமண மோதிரத்தையும் இழந்துள்ளார்.

அவ்வாறு இழந்த மோதிரம் அடகு வைக்கப்பட்ட நிலையில், அதனை மீட்க – சில நாட்களே உள்ள நிலையில், அதனை மீட்டுத் தருமாறு ரொஸானா, கொலை செய்யப்பட்ட பாத்திமாவிடம் கேட்டுள்ளார்.

பாத்திமாவும் தீவிரமாக சூதாட்டத்துக்கு அடிமையானவர் ஆவார். சூதாட்டத்தில் தோற்று தங்க நகைகளை இழப்பவர்களின் பொருட்களை அடகில் மீட்டு – தொழில் நடத்துவதை பாத்திமா மேற்கொண்டு வந்துள்ளார்.

ரொஸானாவின் கோரிக்கைக்கமைய பாத்திமா கடந்த 28ஆம் திகதி அவரது வீட்டுக்குச் சென்று ரொஸானாவின் மோதிரத்தை அடகில் இருந்து மீட்டு சிறிய பணத்தை அவருக்கு வழங்கிவிட்டு மோதிரத்தை தன்னிடம் வைத்துக் கொள்வதற்கு பாத்திமா திட்டமிட்டுள்ளார்.

அடகில் இருந்த பொருளை மீட்பதற்காக ரொஸானா மற்றும் பாத்திமா ரொஸானாவின் சகோதரனுக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். அதற்கமைய அடகில் இருந்து மோதிரத்தை மீட்ட பின்னர் ரொஸானா, தேனீர் அருந்த வீட்டுக்கு வருமாறு பாத்திமாவை அழைத்துள்ளார். அழைப்பை ஏற்று பாத்திமா மட்டக்குளியில் உள்ள ரொஸானாவின் வீட்டிற்கு வென்றுள்ளார்.

தேனீர் அருந்திக் கொண்டிருந்த போது ரொஸானாவின் சகோதரன் பின்னால் வந்து பாத்திமாவை தடியால் தாக்கி கொலை செய்துள்ளார். கொலையின் பின்னர் சடலம் வீட்டினுள் வைக்கப்பட்டுள்ளது. அன்னைறய தினம் இரவு வீட்டிற்கு வந்த ரொஸானாவின் கணவருக்கும் கொலை சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தி, அதனை வெளியே சொல்ல வேண்டாம் என ரொஸானா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் சடலம் – பை ஒன்றில் வைக்கப்பட்டு, சிறிய லொரி ஒன்றில் ஏற்றப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள மின்சார உபகரணங்கள் உடைந்துள்ளதாகவும் அதனை பழுது பார்க்க கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறி, லொறியில் மின்சார உபகரணங்களும் ஏற்றப்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்றிச் செல்லப்பட்ட சடலம் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து ரொஸானாவின் சகோதரனினால் முச்சக்கர வண்டியில் ஏற்றப்பட்டு, சப்புகஸ்கந்த குப்பை மேட்டில் கைவிடப்பட்டு செல்லப்பட்டுள்ளது. 29ஆம் திகதியே சடலம் குப்பை மேட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பாத்திமா உயிரிழந்த பின்னர் அவரிடம் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை ரொஸானா கொள்ளையடித்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்