சீனிக்கான நிர்ணய விலையை நீக்க அரசாங்கம் தீர்மானம்

🕔 November 3, 2021

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்க தீர்மானித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

வௌ்ளை சீனி ஒரு கிலோ 122 ரூபாவுக்கும், பொதி செய்யப்பட்ட வௌ்ளை சீனி ஒரு கிலோ 125 ரூபாவுக்கும் விற்பனை செய்யுமாறு கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டது.

இருந்தபோதும் நிர்ணய விலையிலும் அதிக விலைக்கு சந்தையில் சீனி விற்பனையாகி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே சீனிக்கா நிர்ணய விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்