விவசாய அமைச்சின் அனைத்து பதவிகளில் இருந்தும் பேராசிரியர் புத்தி மரம்பே நீக்கம்

🕔 October 26, 2021

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் புத்தி மரம்பே, அமைச்சில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் புத்தி மரம்பேவை, விவசாய அமைச்சில் வகித்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்குமாறு, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, தனது அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இதற்கிணங்கவே, அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ச் செய்கை விஞ்ஞானப் பிரிவில் பேராசிரியர் புத்தி மரம்பே கடமையாற்றி வருகின்றார்.

Comments