மத்திய வங்கி ஆளுநர் நியமனக் கடித்தம்: ஜனாதிபதியிடமிருந்து கப்ரால் பெற்றார்

🕔 September 15, 2021

லங்கை மத்திய வங்கியின் ஆளுநராக முன்னாள் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை அவர் இன்று (15) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், ஒரு பட்டயக் கணக்காளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிதி ராஜாங்க அமைச்சராக பதவி வகித்த கப்ரால், நேற்று முன்தினம் தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜநாமா செய்தார்.

அஜித் நிவாட் கப்ரால் ராஜிநாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்குமாறு – தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்