கொவிட் தடுப்பூசி செலுத்திய நாடுகள்: இலங்கைக்கு முதலிடம்

🕔 September 4, 2021

நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தலில் இலங்கை முதலிடத்தை பிடிததுள்ளது.

Our World இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடந்த வாரத்துக்கான தரவுகளின்படி, இது 13 சதவீதமாக காணப்படுகிறது.

ஈக்வடோர் 12.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

புரூணை, நியூஸிலாந்து மற்றும் கியூபா முறையே 3, 4 மற்றும் 5 ஆவது இடங்களில் உள்ளன.

இது தொடர்பாக Our World நிறுவனத்தின்  தலைவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள அதேவேளை, குறித்த அறிக்கையை மேற்கோள் காட்டி கொழும்பிலுள்ள சீன தூதரகம் இலங்கைக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது

Comments