எதிர்வரும் 10 நாட்கள் நாடு முடக்கப்படுகிறது: அரசாங்கம் அறிவிப்பு

🕔 August 20, 2021

நாடு எதிர்வரும் 10 நாட்களுக்கு முடக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் இன்றிரவு 10.00 மணி தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நாடு முடக்கப்படும் என, அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் இந்தக் காலப் பகுதியினுள் அத்தியவசிய சேவைகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொவிட் பரவில் தீவிரமடைந்துள்ளமையை அடுத்து, நாட்டை முடக்குமாறு சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்