நாடாளுமன்ற ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா: இன்று மேற்கொண்ட அன்ரிஜன் சோதனை முடிவு

🕔 August 17, 2021

நாடாளுமன்ற ஊழியர்கள் 12 பேர் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் இன்று (17) மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனைகளையடுத்து இவ்விடயம் கண்டறியப்பட்டது.

நாடாளுமன்றத்தில் 275 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்குவர் என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்படி சோதனையில் 12 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்களின் நெருங்கிய தொடர்புகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை தொடக்கம் மறு அறிவிப்பு வரும் வரை, நாடாளுமன்றம் வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் செயல்படும் என்று நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்