ஈஸ்டர் தின தாக்குதல்தாரியின் தந்தை, சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பு

🕔 August 7, 2021

ஸ்டர் தின தாக்குதல்களின் போது கொச்சிக்கடை தேவலாயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹமட் முவாத் என்பவரின் தந்தையை அனைத்து குற்றங்களில் இருந்தும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீ ராகல இந்த உத்தரவை நேற்று வெள்ளிக்கிழமை பிறப்பித்தார்.

மேற்டி நபருக்கு எதிராக விசாரணையை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு போதிய சாட்சிகள் இல்லை என, விசாரணைப் பிரிவினர் தெரிவித்தமையை அடுத்து, இவரை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதாக நீதிவான் உத்தரவிட்டார்.

மேற்படி நபர் நீண்ட காலமாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரை விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்