இஷாலினி மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி

🕔 August 3, 2021

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து உயிரிழந்த இஷாலினியின் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இஷாலியின் மரணத்துக்கு நீதி வேண்டி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது வேடிக்கையானது எனவும், நீதியை நிலைநாட்ட போராட்டம் நடத்த வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று செவ்வாய்கிழமை உரையாற்றிய போது அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில்;

இஷாலினியின் மரணத்தை வைத்து மலையக தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாட்டை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தேர்தல் காலமாக இருந்தால், முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இடையில் மோதல்களை உருவாக்கி அதனை தடுத்து நிறுத்தியது தாங்களே என சிங்கள மக்களிடம் இந்த அரசாங்கம் மார்தட்டிக்கொள்ள முயற்சித்திருக்கும்.

எந்தவொரு விடயம் பற்றி பேசினாலும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் யுத்தம் பற்றியே பேசி வருகின்றனர்.

ஆட்சியை கவிழ்ப்பதோ அல்லது அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவிப்பதோ எமது கட்சியின் நோக்கமல்ல.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்