றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

🕔 July 26, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் உள்ளிட்ட மூவரை ஓகஸ்ட் 09ஆம் திகதி வரையும் (14 நாட்கள்) விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி மூவரும் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது, நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.

கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த மூவரையும் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

றிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதுடைய சிறுமியொருவர் அங்கு தீக்காயங்களுக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமானார்.

இதனையடுத்து றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை வேலையில் சேர்த்த தரகர் ஆகியோரை நேற்று முன்தினம் 24ஆம் திகதி பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இதன்போது அவர்கள் மூவரையும் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதித்தித்ததோடு, இன்று அவர்களை மீண்டும் நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

அதற்கமைய அவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவர்கள் மூவரையும் ஓகஸ்ட் 09ஆம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை உயிரிழந்த சிறுமியின் உடலை தோண்டியெடுத்து மீண்டும் பிரேத பரிசோதனையொன்றை நடத்தி அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்பான செய்தி: றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்