ஜோசப் ஸ்டாலின், துமிந்த நாகமுவ உள்ளிட்ட 24 பேர், தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து விடுவிப்பு

🕔 July 16, 2021

லங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர், முல்லைத்தீவிலுள்ள தனிமைப்படுதல் நிலையத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை முன்னணி சோஷலிச கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 06 பேர், கண்டி – பல்லேகல தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக இவ்வாறு தனிமைப்பபடுத்தப்பட்டனர்.

கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிராக மேற்படி நபர்கள்ஆர்ப்பாட்டம் செய்தமையினை அடுத்து, இவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில்ஆஜர் செய்யப்பட்ட நிலையில், இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

ஆயினும் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து இவர்களை விடுவிக்குமாறு பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இந்தப் பின்னணியில் மேற்படி நபர்கள் 08 நாட்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் கழித்த நிலையில், இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்