நாட்டை விட்டு வெளியேற பெருமளவானோர் முயற்சி; சிங்களவர்களே அதிகம்: வஜிர தகவல்

🕔 July 16, 2021

ற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 600,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களில் விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு பேசிய அவர்; “விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் சதவீதம் அண்மைய காலங்களில் மிகப் பெரிய அளவில் அதிகரித்ததுள்ளமை இதுவே முதல் முறையாகும்” என்றார்.

விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலோர் சிங்கள பௌத்தர்கள் என்பதும், அறிஞர்கள், கல்வியாளர்கள், வணிகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இதில் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்