கைக்குண்டு, துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு, 20 வருட கடூழிய சிறை; திருகோணமலை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

🕔 November 26, 2015

Prison - 0978– எப். முபாரக் –

ட்டவிரோதமான முறையில் இரண்டு கைக்குண்டுகளையும், கைத்துக்கியையும் தன்வசம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு இருபதுவருடம் கடடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரன் இன்று வியாழக்கிழமை இந்த தீர்ப்பினை வழங்கினார்.

திருகோணமலை சிறுப்பிட்டி, சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய செல்லத்தம்மி சோமசுந்தரம் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை சாம்பல்தீவு பகுதியில் அனுமதியின்றி இரண்டு கைக்குண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கியினை மேற்படி நபர் தன் வசம் வைத்திருந்த நிலையில், உப்புவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு, திருகோணமலை உயர்நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம், இருபது வருடம் கடூழிய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்