ஜனாதிபதி மைத்திரி மோல்டா பயணம்

பொதுநலவாய நாடுகளில் மாநாடு நாளை 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை மோல்டாவில் நடைபெறுகிறது.
பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தை இம்முறை பொறுப்பேற்றுள்ள இலங்கை ஜனாதிபதியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாட்டில் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் மற்றும் எடின்பரோ கோமகன் உட்பட 30 நாடுகளில் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இம்முறை மாநாட்டினை நடத்தும் மோல்டா நாட்டு தலைவரிடம் பொதுநலவாயத்தின் தலைமைத்துவ பொறுப்பு ஒப்படைக்கப்படவுள்ளது.