டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக வழக்கிலிருந்து மேலும் 06 பேர் விடுவிப்பு

🕔 July 2, 2021

மெதமுலானயில் அமைந்துள்ள டி. ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் தொடர்பான வழக்கிலிருந்து மேலும் 06 பிரதிவாதிகள் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் இவ்வாறு குறித்த வழக்கிலிருந்து சந்தேக நபர்களை விடுவித்தது.

மெதமுலானயில் டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை 33.9 மில்லியன் ரூபா பொது நிதியைப் பயன்படுத்தி நிர்மாணித்த குற்றச்சாட்டின் பேரில், தற்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நொவம்பர் 2019 இல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வழக்கிலிருந்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

அரசியலமைப்பின் படி ஜனாதிபதிக்கு சிறப்புரிமைகளைக் கருத்திற் கொண்டு, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகளை முடிவுறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்