கொரோனாவால் முஸ்லிம்கள் விகிதாசார ரீதியாக அதிகளவில் மரணம்: தமிழர்கள் மிகக் குறைவு

🕔 June 24, 2021

– முன்ஸிப் அஹமட் –

லங்கையில் கொவிட் தொற்று காரணமாக மரணித்தவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கையே விகிதாசார அடிப்படையில் அதிகம் என தெரிய வந்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தினுள் 7631 பேருக்கு ஒருவர் எனும் விகிதத்தில் கொவிட் மரணம் நிகழ்ந்துள்ளது.

சிங்களவர்களில் 15972 பேருக்கு ஒருவரும், தமிழர் சமூகத்தில் 20024 நபர்களுக்கு ஒருவர் எனும் விகிதத்திலும் கொவிட் மரணம் நிகழ்ந்துள்ளன.

முதலாவது கொவிட் மரணத்திலிருந்து கடந்த மே 28ஆம் திகதி வரையிலான தரவுகளின் அடிப்படையில், 950 சிங்களவர்களும், 245 முஸ்லிம்களும், 157 தமிழர்களும், 04 பறங்கியர்களும், 07 வெளிநாட்டவர்களும் கொவிட் தொற்று காரணமாக மரணித்துள்ளனர்.

2011ஆம் ஆண்டின் இலங்கை சனத்தொகை கணிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த விகிதாசாரம் கணிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்