ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்

🕔 June 23, 2021

க்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று புதன்கிழமை சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

42 வருடங்களாக தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், 03 தடவை பிரதம மந்திரியாகவும் பதவி வகித்த ரணில், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு உறுப்பினரும் கடந்த தேர்தலில் கிடைக்காத போதும், தேசியப்பட்டில் உறுப்புரிமையொன்று கிடைத்தது.

ஆயினும் அந்த உறுப்புரிமையை நிரப்புவதற்கு கடந்த 09 மாத காலம் இழுத்தடிப்பு நிலவி வந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க – அதற்கு தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையிலேயே, இன்று புதன்கிழமை சபை அமர்வு ஆரம்பித்த நிலையில், சபாநாயகர் முன்பாக ரணில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்