‘பல்டி’க்கு தயாராகும் டிரான்

🕔 November 25, 2015
Diron alas -098‘மவ்பிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ பத்திரிகைகளின் உரிமையாளர் டிரான் அலஸ், ஜனாதிபதி மைத்திரியின் பக்கம் சாய்வதற்கான கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவருக்கு வக்காளத்து வாங்கிய ஊடக நிறுவனங்களில் டிரான் அலஸின் ஊடக நிறுவனம் முக்கிய பங்கு வகித்திருந்தது.

சரத் பொன்சேகாவின் கட்சியினூடாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட டிரான் அலஸ், ராஜபக்ஷவினருடன் நல்லுறவைக் கொண்டிருந்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் வரை,  மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் ஆதரவாளராகவே டிரான் அலஸ் தன்னை அடையாளம் காட்டினார்.

எனினும், தற்போது மாறிவரும் அரசியல் மாற்றங்களை உணர்ந்து கொண்ட நிலையில், ஜனாதிபதி மைத்திரி தரப்புடன் இணைவதற்கான முயற்சிகளை டிரான் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக தற்போது அவரது பத்திரிகைகளில் மைத்திரியின் புகழ்பாடும் செய்திகள் பிரசுரிக்கப்படத் தொடங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

ராடா நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் டிரான் அலஸ் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணைகள் இடம்பெற்ற வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்