எச்சரிக்கை; உங்கள் கைத்தொலைபேசிகளில், இந்த செயலிகள் உள்ளனவா: தகவல்கள் திருடப்படலாம்

🕔 June 21, 2021

‘ஜோக்கர்’ என்ற வைரஸ் மூலம் அன்ட்ரொய்ட் கைப்பேசியில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படுவது மட்டுமின்றி கைப்பேசியையும் செயலிழக்கப்படச் செய்வதாகவும் ‘குயிக் ஹீல் அன்ரிவைரஸ்’ நிறுவனம் எச்சரித்துள்ளது.

முன்னதாக கடந்த 2020 ஜூலையில், கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கக்கூடிய 40க்கும் மேற்பட்ட செயலிகளை இந்த வைரஸ் குறிவைத்திருந்தது. இதனையடுத்து, குறித்த செயலிகளை ப்ளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியது.

தற்போது ‘ஜோக்கர்’ என்ற இந்த வைரஸ் 8 க்கும் மேற்பட்ட செயலிகள் மூலம் கைப்பேசிகளில் ஊடுருவி, தகவல்களை திருடி வருவதாக தெரியவந்துள்ளது.

கோ மெசேஜஸ், ப்ரீ கேம் ஸ்கேனர், பாஸ்ட் மெஜிக் எஸ்.எம்.எஸ்., சுப்பர் மெசேஜ், எலிமென்ட் ஸ்கேனர், ட்ரவல் வோல்பேப்பர் போன்ற செயலிகள் மூலம் கைப்பேசிக்குள் நுழையும் ஜோக்கர் வைரஸ், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள், ஓடிபி போன்றவற்றை திருடுவதாக தெரியவந்துள்ளது.

இந்த செயலிகளை பயன்படுத்துவோர் உடனடியாக கைப்பேசியில் இருந்து குறித்த செயலிகளை நீக்கி விடுமாறு ‘குயிக் ஹீல் அன்ரிவைரஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்