மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: 03 பிள்ளைகளின் தந்தை பலி

🕔 June 20, 2021

– க. கிஷாந்தன்

லிந்துலை நகரத்தை அண்மித்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

நானுஓயா சமர்செட் பகுதியை சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய விஜயசுந்தரம் என்பவரே இவ்வாறு மரணமானார்.

தலவாக்கலை பகுதியிலிருந்து நானுஓயா நோக்கி பயணிக்கையில், அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து வீசப்பட்டதாகவும் அதன்போது வீதிக்கு அருகாமையில் இருக்கும் எல்லைக் கல்லில் தலை அடிபட்டதாகவும் தெரியவருகிறது.

படுகாயமடைந்த அவர் லிந்துலை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படும் வழியில் உயிரிழந்தார் என்றும், சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்