கொரோனா மரணம் 28 வீதம் அதிகரிப்பு: அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு

🕔 June 10, 2021

கொவிட் மரணங்கள் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 28 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ன அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே தெரிவித்தார்.

மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சிறிது அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் (09) கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகைதந்த ராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னர் வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், அது 14 நாட்களுக்குள் பரவியிருக்கலாம் என்றும், இந்த தொற்றாளர்கள் தற்போதுதான் பதிவாகி வருவதாகவும் கூறிய அவர், இந்தத் தொற்றாளர்கள் இதற்குப் பிறகும் பதிவாகலாம் எனவும் தெரிவித்தார்.

நாட்டில் இதுவரையில் 215,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதும், அவர்களில் 182,238 பேர் சுகமடைந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்