பாலியல் தேவைக்கு சிறுமியை இணையம் ஊடாக விற்று வந்தவர் கைது

🕔 June 9, 2021

தினாறு வயது சிறுமியொருவரை பாலியல் தேவையின் பொருட்டு இணையம் ஊடாக விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதின்ம வயதுடையவர்களை பாலியல் தேவைகளுக்காக பல்வேறு நபர்களுக்கு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் விற்றுள்ளார் என, பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் கல்கிஸ்ஸ பகுதியில் குடியிருப்பு ஒன்றை வாடகைக்குப் பெற்று, தனது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தெல்தோட்டையில் குறித்த சிறுமியை அவரின் தாயிடமிருந்து வாங்கிய சந்தேக நபர், நாளாந்த அடிப்படையில் அச் சிறுமியை பலருக்கு விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறுமியின் தாயியிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் நேற்றைய தினம் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதாகவும், அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

சந்தேக நபருடன் கடந்த 03 மாதங்கள் தொடர்பு வைத்துக் கொண்டவர்களைக் கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சார் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்