கல்முனையில் மாணவன் கடலில் மூழ்கி மரணம்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது பரிதாபம்

🕔 June 8, 2021

– நூருள் ஹுதா உமர் –

ண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் நேசமணி அக்ஸயன் (வயது 17) இன்று செவ்வாய்கிழமை மாலை கல்முனைக்கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

உயர்தரம் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து கடலில் குளித்து கொண்டிருந்த போதே சம்பவம் நடந்துள்ளதாகத் தெரியவருகிறது.

மரணித்தவரின் உடல் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு பயணக்கட்டுப்பாட்டில் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலையே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்