ஜுன் மூன்றாம் வாரம் ரணில் நாடாளுமன்றம் வருவார்

🕔 June 8, 2021

க்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவ்வாறு நடைபெறவில்லை.

இதேவேளை, இம்மாதம் (ஜுன்) மூன்றாம் வாரமளவில் அவர் நாடாளுமன்றம் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை மட்டுமே கிடைத்தது.

அந்த உறுப்புரிமைக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதென பல தடவை தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், அதனை ரணில் மறுத்து வந்தார்.

இறுதியில் கட்சியின் முடிவை ரணில் ஏற்றுக் கொண்டதை அடுத்து, அவர் – ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டில் நாடாளுமன்றஉறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்