முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம தேரர், கொவிட் தொற்றுக்குப் பலி

🕔 May 30, 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித தேரர் ( வயது 68) நேற்று இரவு காலமானார்.

அவர் மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார்.

கொவிட் தொற்றுக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த அவர், சில நாட்களுக்கு முன்பு குணமடைந்த நிலையில் விகாரைக்குத் திரும்பியிருந்தார்.

ஆனாலும் சுவாசக் கோளாறு காரணமாக மீண்டும் அவர் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.

லங்கா சம சமாஜா கட்சியின் உறுப்பினரான பத்தேக தேரர் தேரோ 2001 முதல் 2004ஆம் ஆண்டு வரை, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.

கடந்த முறை தென் மாகாண சபையிலும், அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் உறுப்பினராப் பதவி வகித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்