கொரோனா: ஆயுர்வேத மற்றும் அலோபதி முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் ஆரம்பம்

🕔 May 29, 2021

– பைஷல் இஸ்மாயில் – 

கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆயுர்வேத மற்றும் அலோபதி சிகிச்சை முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் திருகோணமலை கப்பல்துறை தள ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் நேற்று மாலை வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர். ஸ்ரீதரனின் வழிகாட்டலின் கீழ், கப்பல்துறை தள ஆயுர்வேத சித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம். நிரஞ்சனின் மேற்பார்வையில் குறித்த வைத்தியசாலையின் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

50 படுக்கைகளுடன் கூடிய இந்த சிகிச்சை நிலையத்தில் நேற்றைய தினமே 50 பெண் கொரோனா தொற்றாளர்கள் உட்பட சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு ஆயுர்வேத மற்றும் அலோபதி முறைமையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம். நிரஞ்சன் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்