துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம்; புதன், வியாழன் ஆகிய தினங்களில் நடைறும்

🕔 May 14, 2021

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் இடம்பெறவுள்ளது.

அந்த இரு தினங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்படாது என நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நிதி சட்டமூலத்தின் இரண்டு பிரேரணைகளும், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி சட்ட மூலத்தின் கீழான பிரேரணைகள் இரண்டும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments