தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றார்

🕔 May 7, 2021

மிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை பதவியேற்றார்.

தமிழக ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவருக்கு பதவி உறுதி மொழியும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தார்.

ஆளுநர் பன்வாரிலால், ‘ஐ எம்.கே. ஸ்டாலின்’ (I am M.K. Stalin) என்று ஆங்கிலத்தில் கூற, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்’ என்று தொடங்கி பதவியேற்பு உறுதிமொழியை ஸ்டாலின் வாசித்தார்.

ஸ்டாலின் பதவியேற்றபோது அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி பல்வேறு துறைகளுக்கான அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள்.

ஸ்டாலினைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்று உறுதி மொழிந்தனர்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

கண்கலங்கும் துர்கா ஸ்டாலின்

Comments