றிஷாட் பதியுதீனை நாடாளுமன்றுக்கு அழைப்பதில் சிக்கல் இல்லை: சட்ட மா அதிபர் திணைக்களம்

🕔 May 5, 2021

டுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள றிஷாட் பதியுதீன் நாடாளுமன்றம் வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதில், எவ்வித சட்டச் சிக்கலும் இல்லையென சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 24ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், 90 நாள்கள் தடுத்துவைத்து விசாரிக்கும் உத்தரவின் கீ்ழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ், தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைதுசெய்யப்பட்டுள்ள றிஷாட் பதியுதீனை நாடாமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம் என, ​பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்