
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், 64.39 சதவீதமான மாணவர்கள் பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகளைப் பெற்றுள்ளனர்.
2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு 362,824 பரீட்ச்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களுள் பரீட் முடிவுகளின் அடிப்படையில் 194,297 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை பரீட்சை எழுதியவர்களில் 86 பேரின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சை மீள் பரீசிலனைக்காக விண்ணப்பங்கள் எதிர்காலத்தில் வௌியிடப்படும்..



