மேல் மாகாணம்; வெளியேறுவோர், உள் வருவோருக்கு அன்ரிஜன் பரிசோதனை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

🕔 April 29, 2021

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மற்றும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிப்போரை அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொவிட் 19  வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக இன்று (29) நண்பகல்12 மணி தொடக்கம், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மற்றும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிப்போர் அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்