உக்ரைன் நாட்டு பிரஜை, மாத்தளையில் பலி

🕔 November 17, 2015

Accident - 095
– க. கிஷாந்தன் –

க்ரைன் நாட்டுப் பிரஜையொருவர் – மாத்தளை தெனியாய அக்குரஸ்ஸ பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.

யூரி குட்சென்கோ (yurii kutsenko) எனும் பெயருடைய திருமணமாகாத 32 வயதான  இளைஞர் ஒருவரே விபத்தில் பலியாகியுள்ளார்.

தெனியாய – அகுரஸ்ஸ பிரதான வீதியின் பிட்டபெத்தர தென்னபிட்ட என்ற இடத்தில், இன்று முற்பகல் இந்த விபத்து நிகழ்ந்தது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி நபர், பிட்டபெத்தர தென்னபிட்ட என்ற இடத்தில் லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பிட்டபெத்தர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலியில் இருந்து சிங்கராஜா வனாந்தரத்தை பார்வையிடுவதற்காக, இவர் உட்பட 05 நபர்கள் அடங்கிய குழுவொன்று 04 மோட்டார் சைக்கிள்களில் செல்லும்போதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த உக்ரைன் நாட்டு பிரஜை சம்பவ இடத்திலேலே மரணித்துள்ளார்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.Accident - 097

Comments

புதிது பேஸ்புக் பக்கம்