ஹரீஸ் சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார்; தேர்தல் காலங்களில் பிரதி பலனைக் கண்டு கொள்வார்: ஹக்கீம்

🕔 February 19, 2021

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான எச்.எம்.எம். ஹரீஸ், சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார் என்றும் அதன் பிரதிபலனை தேர்தல் காலங்களில் கண்டுகொள்வார் எனவும், அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“சஜித் பிரேமதாஸவை திருப்திப்படுத்துவதற்காக, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், எழுத்து மூலம் விளக்கம் கோரப்பட்டது. கட்சிக்குள்ளே பிரச்சினைகள் இல்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கூறியிருந்தார். உண்மையில் சஜித் பிரேமதாஸவை திருப்திப்படுத்துவதற்காக அவர்களிடம் விளக்கம் கோரினீர்கள்?” என, குறித்த நிகழ்ச்சியின் ஊடகவியலாளர் ரஊப் ஹக்கீமிடம் எழுப்பிய கேள்விக்கு, அவர் பதிலளிக்கும் போதே, மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

இது தொடர்பில் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்;

“இதையெல்லாம் தனக்கு புள்ளி போட்டுக் கொள்வதற்காக கதைக்கின்றர்.

இப்படி வித்தியாசமான கோணங்களில் கதைப்பது அவருக்கு வாடிக்கையாகிப் போய் இருக்கிறது.

எனவே இதனுடைய பிரதி பலன் எப்படி இருக்கும் என்பதை, தேர்தல் காலங்களில் அவர் கண்டு கொள்வார் என்பதில் எந்தவித ஐயப்பாடும் கிடையாது” என்றார்.

Comments