மூத்த அறிவிப்பாளர் ரசீத் எம் ஹபீழ் காலமானார்

🕔 February 19, 2021

மூத்த அறிவிப்பாளரும், ரூபவாஹினி முஸ்லிம் பிரிவின் முன்னாள் பொறுப்பாளருமான ரசீத் எம் ஹபீழ் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.

சில நாட்களாக கடும் சுகயீனமுற்றிருந்த அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்அவர் காலமானதாக தெரியவருகிறது.

தொலைக்காட்சியில் மட்டுமன்றி வானொலியிலும் புகழ்பெற்ற அறிவிப்பாளராக இவர் விளங்கினார்.

அதேவேளை ஊடக அமைப்புக்களிலும் ரசீத் எம் ஹபீழ் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்